ஸ்பீக்கர் தூணில் ஏறிய தொண்டர்… அதட்டிய விஜய்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில், விஜய் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தொண்டர் உற்சாகத்தில் ஸ்பீக்கர் தூண் மீது ஏறி ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே இதை கவனித்த விஜய், “கீழே இறங்கினால்தான் முத்தம் கொடுப்பேன்” என்று கூறி அந்த தொண்டரை பாதுகாப்பாக கீழே இறங்க வைத்தார். தொண்டர் கீழே வந்ததும் விஜய் அவருக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வு கூட்டத்தில் இருந்தவர்களிடம் பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய விஜய், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்கு பெரிய பலம் என்றார். இன்னும் பலர் கட்சியில் சேர உள்ளதாகவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். திமுக ஒரு தீய சக்தி, TVK ஒரு தூய சக்தி என்றும், களத்தில் இருப்பவர்களுடன் மட்டுமே அரசியல் போட்டி நடத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
