ரசிகர்கள் அதிர்ச்சி... ஐபிஎல் தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

 
ஷகிப் அல் ஹசன்

தற்போது நடந்து வரும் 16வது ஐபிஎல் டி-20 தொடரில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் முமையாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் கொல்கத்தா கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உட்பட 12 நகரங்களில் 16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 31ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சில அணிகளால் பெரும் எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட சில பெரிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர். 

ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய பெரிய இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் காயத்தால் ஆடவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் முதல் பாதி சீசனிலிருந்து விலகினர். ஜானி பேர்ஸ்டோ, வில் ஜாக்ஸ், பிரசித் கிருஷ்ணா, ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய வீரர்கள் ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகினர்.

Shakib Al Hasan

இந்த நிலையில, கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஆடிவருவதால், அந்த தொடர் முடிந்ததும் ஐபிஎல்லில் கொல்கத்தா அணியுடன் இணைவார்கள் என்று சொல்லப்பட்டது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்பதற்காகவும் சொந்தக் காரணங்களுக்காகவும் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் லிட்டன் தாஸ் விளையாடுவது பற்றிய தகவல் எதுவும் இல்லை. டெல்லி அணியைச் சேர்ந்த முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

Shakib Al Hasan

ஷகிப் அல் ஹசனை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.50 கோடிக்கு கொல்கத்தா அணி தேர்வு செய்தது. தற்போது ஷகிப் அல் ஹசன் இல்லாமல் கொல்கத்தா அணியில் லிட்டன் தாஸ் உள்பட 6 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளார்கள். வரும் வியாழன் அன்று, கொல்கத்தாவில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடவுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web