வைரல் வீடியோ!! சிங்கத்தை கல்லால் அடித்து விரட்டும் விவசாயி!!

 
சிங்கம்

மூதாட்டி ஒருத்தி முறத்தால் புலியை விரட்டியதாக கதைகளில் படித்ததுண்டு.  இப்போதைய பிள்ளைகளிடம் இதைக் கூறினால் கலாட்டாக்களும், கிண்டல்களும் செய்வதுண்டு. ஆனால் இப்போதைய காலத்திலும் இவையெல்லாம் அரிதில்லை என்பதை போல் குஜராத்தில்   விவசாயி ஒருவர் சிங்கத்தை கல்லால் விரட்டி துரத்தியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   இந்த வீடியோவை குஜராத் மாநிலம் ஜுனாகத் கேஷோத் நகரின் கவுன்சிலர் விவேக் கொட்டாடியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 

இந்த வீடியோவில் கிர் சோம்நாத் மாவட்டத்தில் சிங்கம் ஒன்று வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மீது பாய்ந்தது.  சிங்கத்தின் வலுவான தாடை பசுவின் கழுத்தைப் பற்றிக்கொண்டது. சிங்கத்தின் பிடியில் இருந்து வெளியேற பசு   முயற்சி செய்கிறது. அதே நேரத்தில் மாட்டின் அலறலில் இதனை கவனித்த விவசாயி   தனது மாட்டை காப்பற்ற அவரும் முயற்சிக்கிறார்.  சில அடி தூரத்தில் நின்று கொண்டே  அந்த விவசாயி கூச்சலிட்டு சிங்கத்தை விரட்டுகிறார். இதை கவனித்த சிங்கம், மாட்டை புதருக்குள் இழுத்து செல்ல முயற்சி செய்கிறது.

ஆண் சிங்கம்

ஆனால், மனம் தளராத விவசாயி அங்கிருந்து ஒரு  கல்லை  எடுத்து சிங்கத்தை நோக்கி ஓடி விரட்டி துரத்துகிறார். அச்சத்தில் சிங்கம் மாட்டை விட்டு சென்று பின்வாங்கி புதருக்குள் மறைந்து விட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  விவசாயியின் தைரியத்தை பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர். அதேவேளை, ஒருவேளை சிங்கம் பின்வாங்காமல் விவசாயி தாக்கியிருந்தால் நிலைமை விபரீதமாக ஆகியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web