புகழ் தந்தை காலமானார்... ரசிகர்களை நெகிழ வைத்த சோகம்!
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் புகழின் தந்தை முருகன், உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருடன் இருந்த அவர் திடீரென மறைந்தது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கவனம் பெற்ற புகழ், பின்னர் எதற்கும் துணிந்தவன், டிஎஸ்பி, அயோத்தி, யானை உள்ளிட்ட படங்களில் நடித்தார். மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். தனது உழைப்பால் தனக்கென இடத்தை பிடித்தவர் புகழ்.
தந்தை மறைவுச் செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகழ், “அப்பா என்கிட்ட சொல்லாமல் எங்கேயும் போக மாட்டியே, தெய்வமே இப்படி சொல்லாம போய்டியே” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பல சின்னத்திரை நடிகர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
