பகீர்!! பள்ளி மாணவன் கழுத்தை அறுத்து கொலை!! காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை வெறிச்செயல்!!

 
தமிழ்செல்வி

படிக்கும் போதே காதலித்து எதிர்காலத்தை வீணாக்கி கொள்வது இன்றைய மாணவ சமூகத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும் அதனை சமூக வலைதளங்களில் தினமும் உடனுக்குடன் அப்டேட் செய்து அதில் லைக்குகளை, ஷேர்களை அள்ளுவதில் மாணவ , மாணவிகளிடையே போட்டி வேறு. இதனால் படிப்பும் பாழாகி எதிர்காலமும் கேள்விக்குறியாகிறதே என்ற கவலை மாணவர்களுக்கு கிடையாது. முந்தைய தலைமுறை போல் பெற்றோர் சொல்பேச்சு கேட்டு நடந்து கொள்ளும் பிள்ளைகளும் இல்லை. இவர்கள் படிப்பும், எதிர்கால வாழ்க்கையும் என்னாகுமோ என்ற கவலையும், வலியும், ஆத்திரமும் பெற்றோர்களுக்கு தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போல் 12ம் வகுப்பு மாணவன் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி காதலாகி மாறிப்போன  மாணவியை திருவிழாவுக்கு அழைத்து சென்று அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இவை குறித்து கண்டித்த பெண்ணின் தந்தை மாணவனை தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தில் வசித்து வருபவர்  கமலேஷ்வரன். இவர் , பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தந்தையை இழந்த கமலேஷ்வரன், தனது தாய் மற்றும் தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்த்து வந்தார்.  இவர் சமூக வலைதளங்களில் அதிகம் ஆர்வம்கொண்டு சுற்றித் திரிந்தான். இதில் போடேந்திரபுரத்தை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகளுடன் அறிமுகம் ஏற்பட்டது.

சன்னாசியின் மகள் தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் சன்னாசியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயபிரகாஷ் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்செல்வி

எனினும் இருவரும் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயபிரகாஷ் ஆகிய மூன்று பேரும் கமலேஷ்வரன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த கமலேஷ்வரனின் தாய், தாத்தா, பாட்டியிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியதால், சன்னாசி குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த கமலேஷ்வரனை கடுமையாக தாக்கியுள்ளனர். மீண்டும் தனது மகளிடம் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என எச்சரித்து உள்ளனர். எனினும் இருவரும் காதலை நிறுத்தவில்லை. அதன்பிறகே காதல் நெருக்கமானதாக கூறப்படுகிறது. இது சன்னாசிக்கு கடும் ஆத்திரம் அடைந்தார்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு கமலேஷ்வரன், தனது காதலியை அழைத்து சென்றுள்ளார். இந்த விவகாரமும் சன்னாசி குடும்பத்துக்கு தெரியவந்ததால் கோபம் அதிகமானது, இதனையடுத்து மகளின் காதலனை கொலை செய்ய சன்னாசி குடும்பத்துடன் திட்டம்போட்டார்.

இந்த நிலையில் கமலேஷ்வரன் வீட்டை விட்டு விவசாய தோட்டத்திற்குச் செல்வதை அறிந்த சன்னாசி அவரின் பின்னால் சென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக கமலேஷ்வரனை குத்தியுள்ளார். இதில் கமலேஷ்வரன் சரிந்துவிழுந்து மயக்கமடைந்தார். எனினும் ஆத்திரம் தீராத சன்னாசி அவரின் கழுத்தை முற்றிலுமாக துண்டித்து தலையை தனியாக எடுத்து அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

தமிழ்செல்வி

வீட்டைவிட்டு வெளியே சென்று வெகு நேரம் ஆனதால் பயந்து போன கமலேஷ்வரனின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்தில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கமலேஷ்வரன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் விவசாரணை நடத்தினர். இரு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் சன்னாசி தான், மகளின் காதலனை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து சன்னாசி, கொலைக்கு உடந்தையாகச் சன்னாசியின் மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். 12 வகுப்பு மாணவனைக் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web