வருடத்தின் முதல் நாளே அதிர்ச்சி... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு!
புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1, 2026), எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளன. சென்னையில் இன்றைய நிலவரப்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி நீடிக்கிறது, அதே சமயம் வணிக ரீதியான சிலிண்டர் விலையில் ஏற்றம் காணப்படுகிறது.
சென்னையில் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் அதே விலையே இன்றும் தொடர்கிறது. இன்றைய விலை: ₹868.50

அதே நேரத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் (19 கிலோ) விலையில் இன்று அதிரடியாக உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் இந்த சிலிண்டர் விலை சென்னையில் சுமார் ₹110 வரை உயர்ந்துள்ளது. இன்றைய விலை: ₹1,849.50
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (IOCL, BPCL, HPCL) மாதந்தோறும் முதல் தேதியில் விலையை மாற்றியமைக்கின்றன.

இன்று முதல் இயற்கை எரிவாயு போக்குவரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் சிஎன்ஜி (CNG) மற்றும் பிஎன்ஜி (PNG) விலையைக் குறைக்க உதவும் என்றாலும், எல்பிஜி சிலிண்டர் விலையில் சர்வதேச தாக்கமே அதிகமாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
