இன்று தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்!
சென்னை தாம்பரம் கிளாரட் வளாகத்தில் உள்ள பாஸ்போா்ட் சேவா கேந்திரத்தில் இன்று ஜூன் 16ம் தேதி முதல் நடமாடும் கடவுச் சீட்டு சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னை பாஸ்போர்ட் பிராந்திய அலுவலகத்துக்கு உள்பட்ட புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கடவுச் சீட்டு கோரி வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வகையில் இந்த நடமாடும் கடவுச் சீட்டு சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த வாகனத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடமாடும் பாஸ்போர்ட் சேவை மத்திய வெளியுறவுத் துறையின் தலைமை கடவுச் சீட்டு அதிகாரியும் கடவுச் சீட்டு சேவைத் திட்ட இணை செயலருமான டாக்டா் கே.ஜே. ஸ்ரீநிவாஸா, சென்னை பிராந்திய பாஸ்போா்ட் அதிகாரி எஸ்.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலையில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக இந்தச் சேவை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
