வாழ்த்துகள் ஜென்சி... லயோலா கல்லூரியில் உதவி பேராசிரியரான முதல் திருநங்கை… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
Jun 22, 2025, 20:50 IST

சென்னை லயோலா கல்லூரியில் திருநங்கை ஜென்சி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை டாக்டர் ஜென்ஸி பெற்றுள்ளார். இவர் தற்போது அதே லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் உதவி பேராசிரியராக பணியிலும் சேர்ந்துள்ளார்.
தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வதாரத்தை பலப்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது திருநங்கை ஜென்சி முதன் முறையாக ஆங்கிலத் துறையில் பட்டம் பெற்றது அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தது திருநங்கைகளுக்கு ஊக்கமளிக்கும் சம்பவமாக மாறி உள்ளது.
இந்நிலையில் திருநங்கை ஜென்சிக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் வாழ்த்துக்கள் டாக்டர் ஜென்சி. உங்கள் உழைப்பின் ஒளியால் இன்னும் பல நூறு நூறு பேர் கல்விக்கரை சேரட்டும். மேலும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும் என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!