இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இதையொட்டி விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

மீன் இறைச்சி தூத்துக்குடி துறைமுகம்

எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 254 விசைப்படகுகள், வேம்பாரில் உள்ள 33 விசைப்படகுகள், தருவைகுளத்தில் உள்ள 280 விசைப்படகுகள் ஆக மொத்தம் 567 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

மீன் கடை மார்க்கெட் அசைவம்

இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுநீக்குதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அறிவிக்கப்படும் நிலையில், மேற்கு கடற்கரையை சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிப்பதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?