ஜூன் 30 வரை கட்டணமில்லா பயண அட்டை செல்லுபடியாகும்..!

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லா பயண அட்டைகள் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் 2023 செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கி இதற்கான அட்டைகள் ஆன்லைன் மூலம் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ஆன்லைன் மூலம் பயண அட்டை பெறும் நடைமுறையை செயல்படுத்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி மார்ச் 31ம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30ம் தேதி வரை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!