"404 வாக்குறுதிகள் நிறைவேற்றம் என்பது அப்பட்டமான பொய்!" - ஸ்டாலினுக்கு அன்புமணி நேரடிச் சவால்!

 
அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின்

திமுக அரசு தனது 2021 தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 80% நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவதை அன்புமணி ராமதாஸ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

பாமக சார்பில் வெளியிடப்பட்ட 'விடியல் எங்கே?' என்ற 103 பக்க ஆவணத்தின்படி, திமுக அரசு இதுவரை வெறும் 66 (13%) வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே புள்ளிவிவரங்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மறுத்தனர். ஆனால், 5 மாதங்கள் கடந்தும் 'பரிசீலனையில் உள்ள 40 வாக்குறுதிகள்' இன்னும் அதே நிலையிலேயே இருப்பதாக அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நீட் ரத்து மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை எனக் கூறித் தட்டிக்கழிக்கப்படுவதாக அன்புமணி சாடியுள்ளார்.

கல்விக் கடன் ரத்து மற்றும் எரிவாயு மானியம் என்று சாமானிய மக்களைப் பாதிக்கும் இந்த வாக்குறுதிகள் இன்னும் காகிதத்திலேயே உள்ளன.

44,000 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஐந்தரை லட்சம் அரசு வேலைகள் என்பது நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"முதலமைச்சர் கூறுவது உண்மையெனில், நிறைவேற்றப்பட்ட 404 வாக்குறுதிகளின் வரிசை எண், ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பயனாளிகளின் பட்டியலை வெளியிடத் தயாரா? அல்லது என்னுடன் நேருக்கு நேர விவாதத்திற்கு வரத் தயாரா?" என அன்புமணி ராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!