ஹை-வேஸ்ல ஓட்டுநர்களை தாக்கி ரூ.11.65 லட்சம் கொள்ளை.. மெயின் ரோட்டில் துணிகரம்!

 
லாரி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ஓசூர் காய்கறி சந்தைக்கு தக்காளி வாங்க பாலகிருஷ்ணன் (54) என்பவர் லாரியை ஓட்டி சென்றுள்ளார். இவருடன் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் சென்றுள்ளார். மதுரை கப்பலுாரில் இருவரும் சாப்பிட்ட நிலையில் பாலமுருகன் லாரியின் உள் பகுதியில் உறங்கியுள்ளார். சதீஷ்குமார் லாரியை ஓட்டி சென்றார்.

லாரி

இவர்கள் தக்காளி வாங்குவதற்கான தொகை ரூ. 11.50 லட்சத்தை டூல்ஸ் பாக்சில் வைத்து பூட்டிவிட்டு, கையில் செலவுக்காக ரூ. 15 ஆயிரம் வைத்திருந்தனர். அதிகாலை 2.45 மணிக்கு திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அடுத்த காமாட்சிபுரம் அருகே சென்றபோது, லாரியை கார் ஒன்று வழி மறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் லாரியின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து ஆயுதங்களுடன் ஏறினர்.

பின்னர் லாரி ஓட்டுநர்கள் பாலகிருஷ்ணன் , சதீஷ்குமாரை ஆகியோரை தாக்கிய கும்பல், இருவருடன் லாரியை கடத்தியது. அந்த கும்பலில் இருந்த ஒருவர் லாரியை ஓட்டினார். சிறிது தூரத்தில் அவர்களை தாக்கி ரூ.11.65 லட்சம் ரொக்கம், லாரி சாவி, செல்போன்களை பறித்துக்கொண்டு ஓட்டுநர்களின் கண்களை துணியால் கட்டிவிட்டு தப்பியோடினர்.

லாரி

சிறிது நேரத்துக்கு பின் மற்ற வாகன ஓட்டுநர்கள் அவர்களை மீட்டனர். பின்னர் அளித்த புகாரின்பேரில், தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர். கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web