சிறுமி பலாத்காரம்... தப்பியோடிய காமவெறியனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்!
உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில், 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் என்கவுண்டர் முறையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியா மாவட்டம் உபாவ் கிராமத்தைச் சேர்ந்த சப்லு ராஜ்பார் (25) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியைத் தனது வீட்டிற்கு நைசாக அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அந்தச் சிறுமி தனது தாயிடம் அழுது கொண்டே கூற, பதறிப்போன தாய் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான சப்லு ராஜ்பாரைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை முபாரக்பூர் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ராஜ்பார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த போலீசார் அவரைச் சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால், குற்றவாளி சப்லு ராஜ்பார் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கித் திடீரெனச் சுடத் தொடங்கினான்.

தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், சப்லு ராஜ்பாரின் காலில் குண்டு பாய்ந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ரத்தக் காயங்களுடன் இருந்த அவனைக் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறியவுடன் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவான் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குக் காவல்துறையினர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
