10ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டல்.. தாய் செய்த காரியம்!

 
கார்த்திக் ராகவன்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைவரும் வீடுகளில் இருந்தனர். இக்காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருக்கு நடந்த கொடூரத்துக்கு இப்போதுதான் நீதி கிடைத்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கின் போது, ஆபாச வீடியோக்களைக் காட்டி, இளைஞர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதோடு, எனது மகளை நிர்வாணப்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி வந்துள்ளார். அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கார்த்திக் ராகவன்

அந்த புகார் மீது அப்போது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், இந்த கொடூரத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அந்த இளைஞர், செல்போனில் பப்ஜி விளையாட சொல்லி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு செய்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது உறுதியானது.

கார்த்திக் ராகவன்

இந்த விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், 2 ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கொடூரத்தில் ஈடுபட்ட கார்த்திக் ராகவன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் தாயார் நடத்திய போராட்டத்துக்கு இப்போது முதல் வெற்றி கிடைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web