நடுவானில் மேலாடையை கழற்றி வீசி இளம் பெண் அட்டகாசம்!! பதறிய பயணிகள்!!

 
விமானம்

சமீபமாக விமானப் பயணங்கள் பெரும் கேலிக்கூத்தாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. பயணிகளை விட்டு விட்டு லக்கேஜ்களை மட்டும் ஏற்றி சென்ற விமானம்,  பெண் பயணியின் மேல் சிறுநீர் கழித்த விவகாரம், பறந்து கொண்டிருந்த போது ஜன்னலை திறக்க முயன்றது என அடுத்தடுத்து சர்ச்சைகளாக உருவாகி வருகிறது. இதே போல் ஒரு சர்ச்சையான சம்பவம் ரஷ்ய விமானத்தில் நடந்தேறியுள்ளது. ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோலில் இருந்து மாஸ்கோவிற்கு ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது, அஞ்செலிகா மாஸ்க்விடினா (49) பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் சீட் பெல்ட் அணியால் எழுந்து சென்றுள்ளார்.விமானத்தில் நான் இப்போது புகைபிடிக்க வேண்டும் என பணிப்பெண்களிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த விமான குழுவினர் விமானத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று கூறி போராடி சமாதானம் செய்தனர்.

விமானம்

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த பெண் திடீரென தனது மேலாடைகளைக் கழற்றினார். அங்கிருந்த பெண்கள் கூட முகம்சுழிக்கும் அளவுக்கு அவர் நடந்துகொண்டார். மேலும், அனைவரும் சாகப்போகிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் விமானிகள் அறைக்குள்ளும் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விமான குழுவினர் அவரை பிடிக்க முயன்ற போது அவர்களையும் கடித்துள்ளார்.

விமானம்

பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அந்த பெண் பயணியைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் அந்த பெண், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பயணியின் செயலால் தாங்கள் நடுவானில் பெரும் அச்சம் அடைந்ததாகவும், இதுபோன்றவர்களுக்கு பயணிக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும்  சக பயணிகள் கூறினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

 
 

From around the web