அந்த மனசு தான் சார் கடவுள்... கோவிலில் கீழே கிடைத்த 2சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த சிறுமிகள்!

 
சிறுமி


 
சென்னை ஜவஹர்லால் நகரில் வசித்து வருபவர்  கவுதம். 33 வயதாகும் இவர்   ஐ.டி.ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.  இவர், தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார்.  இதையடுத்து சாமி தரிசனம் செய்த இவர்கள் மீண்டும் ஊருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது கவுதம் கையில் அணிந்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இரண்டரை சவரன் தங்க காப்பு காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

சிறுமி
இதையடுத்து உடனடியாக மலைக் கோயில் புறக்காவல் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார். சற்று நேரத்தில் இரு சிறுமிகள் புறக்காவல் நிலையம் வந்து கார் பார்க்கிங் பகுதியில் காப்பு கிடந்ததாகக் கூறி பணியில் இருந்த போலீசாரிடம் வழங்கினார்.  

ஆர்.கே.பேட்டை பகுதியில் வசித்து வரும் 12 வயது பவித்ரா  , 7 வயது ரேணுகா என  சகோதரிகள் சாமி தரிசனம் செய்ய வந்த போது நகைகள் கிடந்ததாகவும் போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.  
சிறுமிகள் தங்களது வறுமையிலும் பக்தர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை போலீசார் பாராட்டினர். அத்துடன்  நகை தவறவிட்ட பக்தர் குடும்பத்தினர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web