இசைஞானியின் பொன் விழா! - பெங்களூருவில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
1976-ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, உலக அளவில் நீங்கா இடம்பிடித்த இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தைப் போற்றும் வகையில், பெங்களூருவில் ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இசைப் பயணப் பொன்விழாவை, அக்சய பாத்ரா அறக்கட்டளையின் வெள்ளி விழாவுடன் இணைந்து இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. ஜனவரி 10ம் தேதி பெங்களூருவில் உள்ள மாதவராவில் உள்ள நைஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இளையராஜா கலந்து கொண்டு, ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகத் தனதுப் பிரபலமான பாடல்களைப் பாடி, இசைக் கச்சேரி நடத்த உள்ளார்.

சமீபத்தில், இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் லண்டனில் தனது கனவுப் படைப்பான 'வேலியண்ட்' சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் அரங்கேற்றி, உலக சாதனைப் படைத்தவர் ஆவார். தற்போது படங்களுக்கான இசையமைப்பைக் குறைத்துக்கொண்டாலும், அடிக்கடிச் சிறப்பு இசைக்கச்சேரிகள் நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
