ஐடி ஊழியர்களுக்கு "குட் நியூஸ்" - ஏஐ-யால் பாதிப்பில்லை ... நாஸ்காம் அறிக்கை தகவல்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித வேலைகளைப் பறித்துவிடும் என்ற விவாதங்கள் உலகளவில் நடந்து வரும் சூழலில், இந்தியத் தொழில்நுட்பத் துறை அமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை ஐடி ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
நாஸ்காம் தனது அறிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தால் இந்திய ஐடி சேவைத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்பது ஒரு தவறான புரிதல் என்று குறிப்பிட்டுள்ளது. ஆந்த்ரோபிக்கின் 'கிளாட் கோவர்க்' போன்ற நவீன ஏஐ கருவிகள் பல பணிகளைத் தானியங்கி முறையில் செய்தாலும், அவை இந்திய ஐடி நிறுவனங்களின் சேவைகளை முழுமையாக முறியடிக்காது.

ஏஐ கருவிகள் ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்தி, ஊழியர்களின் உற்பத்தித் திறனை (Productivity) அதிகரிக்கவே உதவும். பெரிய நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது என்பது நேரடியாகச் செய்துவிடக்கூடிய ஒன்றல்ல: இதற்கு வணிகச் சூழலைப் புரிந்துகொண்ட மனிதர்களின் மேற்பார்வை அவசியம்.
சிக்கலான தரவு மேலாண்மை மற்றும் நிறுவனங்களின் பணிப்பாய்வுகளை (Workflows) ஏஐ-யால் தானாகவே கையாள முடியாது; அங்கு ஐடி ஊழியர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஏஐ வருகையால் வேலைகள் குறைவதற்குப் பதிலாக, புதிய வகையான வேலைவாய்ப்புகள் உருவாகும் என நாஸ்காம் கணித்துள்ளது.

ஏஐ மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட், டேட்டா சென்டர் கண்ட்ரோலர் போன்ற புதிய பொறுப்புகள் உருவாகின்றன. ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது ஊழியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் மறுசீரமைப்புப் பயிற்சிகளை (Upskilling) வழங்கத் தொடங்கிவிட்டன.
நாஸ்காம் மற்றும் 'இண்டீட்' (Indeed) இணைந்து நடத்திய ஆய்வில், 97% எச்ஆர் (HR) தலைவர்கள், 2027-க்குள் வேலை என்பது மனிதர்களும் ஏஐ-யும் இணைந்து செய்யும் ஒரு கூட்டுப் பணியாகவே இருக்கும் எனக் கருதுகின்றனர். இது ஏஐ-யால் வேலை பறிபோகும் என்ற வாதத்தை முறியடிக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
