10 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து!! 30 பயணிகள் படுகாயம்!!

 
விபத்து

சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே மலப்பாம்பாடி கிராமத்தில் வசித்து வரும் வேலாயுதம் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையில் ஓரம் கட்டினார்.

விபத்து

கட்டுப்பாட்டை இழந்து பேருந்து 10 அடி பள்ளத்தில் இறங்கியது. இதனால் பேருந்திற்குள் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திடீரென குறுக்கே வந்த வேலாயுதம் வாகனத்தின் மீது மோதிவிடக்கூடாது என  பேருந்தை வலதுபக்கம் திருப்பிய பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்

அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web