கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து... 13 பேர் மீது மோதி விபத்து... 4 பேர் உடல் நசுங்கி பலி!

 
மும்பை அரசு பேருந்து

மும்பை பாண்டுப் (மேற்கு) ரயில் நிலையம் அருகே உள்ள பரபரப்பான ஸ்டேஷன் சாலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது.

மும்பை மாநகராட்சியால் இயக்கப்படும் பெஸ்ட் பேருந்து (வண்டி எண்: A-606), தனது வழித்தடத்தின் இறுதிப் புள்ளியை அடைந்த பிறகு, பின்னோக்கி எடுக்கப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு நின்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக ஏறி இறங்கியது. பேருந்து பின்னோக்கி வேகமாக வந்ததால் அங்கிருந்தவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவர்.

விபத்து

விபத்தில் சிக்கிய மற்ற 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள எம்.டி.அகர்வால் மற்றும் ராஜாஜவாடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பிரணிதா ரசம் (31) என்ற சின்னத்திரை நடிகை மற்றும் மான்சி குரவ் (45) என்ற செவிலியர் ஆகியோரும் அடங்குவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) என்பவரை போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

பேருந்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!