100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை குறைத்த மத்திய அரசு... மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை!

 
100
 


நாட்டின் முதன்மையான வேலைவாய்ப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம் (MGNREGA), பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக, 'வளர்ந்த - வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மிஷன்' (VB - G RAM G) என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாகவும், இதற்கான மசோதா (VB - G RAM G BILL, 2025) விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு 100% முழுவதுமாக வழங்கி வருகிறது. ஆனால், வரவிருக்கும் புதிய VB - G RAM G மசோதாவானது மாநில அரசுகளையும் நிதிப் பகிர்வை வழங்க வழிவகை செய்கிறது. மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாக இது செயல்படுத்தப்படும் அதே வேளையில், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு (உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர்) மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான நிதிப் பகிர்வு விகிதம் 90:10 ஆகவும், சட்டமன்றம் கொண்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய நிதிப் பகிர்வு முறை, தமிழகம் போன்ற பல மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சட்டமானது, "2047 ஆம் ஆண்டு வளர்ந்த பாரதம்" என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த கிராமப்புற மேம்பாட்டுக் கட்டமைப்பை நிறுவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நிதியாண்டிலும், ஊதியத்துடன் கூடிய நூற்று இருபத்தைந்து நாட்கள் வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும். புதிய திட்டம், நீர் பாதுகாப்பு பணிகளுக்குக் கருப்பொருள் கவனம் செலுத்தும். விவசாயப் பருவங்களின் உச்சத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், குறிப்பிட்ட பருவங்களில் இந்தச் சட்டத்தின் கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தப்படவோ கூடாது என்றும் மசோதா வலியுறுத்துகிறதாம். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பம் செய்த ஒருவருக்கு 15 நாட்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கப்படாவிட்டால், இந்தச் சட்டத்தின் விதியின்படி அவருக்குத் தினசரி வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். புதிய திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மத்திய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதக் குழுவால் நிர்வகிக்கப்படும். மாநில அளவில் திட்டத்தைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான கவுன்சிலும் அமைக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!