ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் – ஐகோர்ட் கிளை அதிரடி!
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நேரடியாக நடத்துவது தான் சரியானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் போல் நடத்தக்கூடிய நிகழ்வு அல்ல என்றும் நீதிபதிகள் கூறினர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடத்த அனுமதி கிடைத்தது என்றும் அவர்கள் நினைவுபடுத்தினர். இது ஒரு பண்பாட்டு விளையாட்டு என்றும், பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தனிநபர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியதன் காரணமாகவே கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதனால் இனி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு தொடர்பான முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
