நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என பயந்து ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்... முதல்வர் ஸ்டாலின் கெத்து!

 
நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என பயந்து ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்... முதல்வர் ஸ்டாலின் கெத்து!  

தமிழக சட்டபேரவையில்  ஏப்ரல் 16ம் தேதி தமிழக நகர்ப்புற  மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் 2  சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த மசோதாக்களின் பயனாக,   தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய  கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களிலும் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல்  நேரடியாக நியமன முறையில் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள் .  இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும். 

நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என பயந்து ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்... முதல்வர் ஸ்டாலின் கெத்து!  

ஆளுநர் ரவி இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும்  ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது எதிர்பார்த்த ஒன்றுதான் எனவும், நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து ஒப்புதல் கொடுத்திருக்கலாம் என்றும் முதல்வர்  தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாயொட்டி,  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அவருடைய சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள  திருவுருவப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் பேசிய ஸ்டாலின்  “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்க வேண்டும் திமுக பொதுக்குழுவிலும் சொல்லியுள்ளேன். இதுதான் தொண்டர்களுக்கு பிறந்தநாள் செய்தி.  கலைஞர் 108 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மூலம் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது குறித்த கேள்விக்கு, அது எதிர்பார்த்ததுதான்.

நான் பேசுவதை கேட்டுவிட்டு  வெளிநடப்பு செய்ங்க... இபிஎஸ் சட்டசபையை விட்டு வெளியேறும் போது முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்... !  

 சட்டப்பேரவையில் இது குறித்து தெரிவித்துள்ளேன்.  ஒரு வேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்.” என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது