அசராத மாப்பிள்ளை... 28 கி.மீ. நடந்தே சென்ற திருமணம் செய்த இளைஞன்! வைரலாகும் வீடியோ!

 
இளம்பெண்

ஒடிசா மாநிலம் ரயஹடா மாவட்டம் பருதிபேடு கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த டிபல்படு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த இளம் இணைக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

சுமார் 6 மாதங்களுக்கு முன்பே திருமணத்துக்கு நாள் குறித்து இருவீட்டாரும் தயாராகி வந்தனர். அதன்படி திருமண நாள் வந்ததும், திருமணத்திற்காக 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு நரேஷின் குடும்பத்தினர் புறப்பட்டனர். இதற்காக 2 வேன்களை வாடகைக்கு புக் செய்தனர்.


அவர்கள் நேரம், 5 மாதங்களுக்கு முன்பே புக் செய்திருந்தாலும் வேன் வரவில்லை. அதாவது ஒடிசா மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை கார், வேன் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மணமகன் நரேஷ் தனது திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தனது திருமணத்திற்கு பல்வேறு தடைகள் வந்தபோதும் மனம் தளராத மணமகன் நரேஷ், மணமகளின் வீட்டிற்கு நடந்தே செல்ல முடிவு செய்தார். அதன்படி 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு நரேஷ் நடந்தே சென்றார். அவருடன் குடும்ப உறுப்பினர்கள் 30 பேர் நடந்து சென்றனர்.

இளம்பெண்

வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய மணமகன் நரேஷ், 28 கிலோமீட்டர் தூரம் நடந்தேசென்று மறுநாள் அதிகாலை 2 மணிக்கு மணமகளின் வீட்டை அடைந்தார். இந்த பயணத்திற்கு பின் வெள்ளிக்கிழமை காலை நரேஷுக்கு மணமகளுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் அடித்ததால் பலரும் தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web