மணக்கோலத்தில் சடலமாக மிதந்த மணமகன்... திருமணமான சில மணி நேரத்தில் கொடூரம்!
திருமணம் முடிந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், மணமகன், திருமணமான கோயிலின் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்துள்ளது. திருமண நாளன்றே நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (27). இவர் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் அரும்பாக்கம் கிராமம், ரேணுகாம்பாள் கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர், மணமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கோயில் வளாகத்திலேயே வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் அஜீத்குமார், தான் அணிந்திருந்த மணக்கோலத்திலேயே கோயில் குளத்தின் அருகே சென்றதாகத் தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரைத் தேடினர்.

அஜீத்குமாரைத் தேடிய போது, அவர் கோயிலுக்கு அருகில் இருந்த குளத்தில் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய், உடனடியாகச் சடலத்தை மீட்டுள்ளனர். திருமண நாளில் மணமுடிந்த கோயில் வளாகத்திலேயே மணமகன் சடலமாகக் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் குறித்துக் கலவை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜீத்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரைக் கொலை செய்துள்ளார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணக்கோலத்திலேயே குளத்தில் சடலமாக மிதந்த மணமகனின் மர்ம மரணம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
