13 குழந்தைகளுக்கு பிறகும் கருத்தடைக்கு மறுத்த குடும்ப தலைவன்.. அதிகாரிகளுக்கு வந்த சோதனை !!

 
சாந்தி

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைக்கிராமங்களில் ஒன்றான ஒன்னக்கரையில், சின்னமாதையன் - அவரது மனைவி சாந்தி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மகன்கள், 5 மகள்கள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 13ஆவதாக சாந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் பிரசவத்தின்போது சாந்திக்கு 13 குழந்தைகள் இருப்பதை கேட்டு மருத்துவர்கள், செவிலியர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைதொடர்ந்து சாந்திக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முயற்சித்தனர். 

சாந்தி

ஆனால், சாந்திக்கு ரத்த சோகை இருந்ததால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சாந்தியை விட்டுவிட்டு அவரது கணவர் சின்னமாதையனுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்ன மாதையன் வனப்பகுதிக்குள் சென்று ஒழிந்து கொண்டார்.

மருத்துவக்குழுவினர் எவ்வளோ முயற்சித்தும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனைதொடர்ந்து காவல் மற்றும் வருவாய்த்துறையினரின் உதவியுடன் பெரும் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்திற்கு பின்னர் சின்ன மாதையன் அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டார். 

சாந்தி

இதனையடுத்து சின்னமாதையனுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது. மலைப்பகுதிகளில் அதிகாரிகள் கருத்தடை குறித்து உரிய விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web