இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை... கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மனு!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், சி.பி.ஐ. விசாரணை உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 13ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று (டிசம்பர் 12, 2025, வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கான உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி. (SIT) குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் இந்த மனுவின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
