நெகிழ்ச்சி...11 வயது சிறுமிக்காக ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்... !

 
இதயம்

தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தில் வசித்து வரும் சிறுமிக்கு  குழந்தை முதலே இதயப்பிரச்சனை இருந்து வந்தது.  இவருக்கு வயது 11 தான். சிறுமி லகரிக்கு  இதய பாதிப்பு காரணமாக திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் டிசம்பர் 6ம் தேதி  முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  சிறுமி லகரிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.    

ஹெலிகாப்டர்

ஆந்திர அரசின் ஜீவதானம் திட்டத்தின் மூலம் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யத் தேவையான இதயத்திற்காக மகளின் பெயரை பதிவு செய்துவிட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம்   ராவி வலசை கிராமத்தில் வசித்து வரும்   50   ராஜேஸ்வர ராவ்,  தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர்   மூளைச்சாவு அடையவே உறவினர்கள் உடல் உறுப்பு தானத்திற்கு முன்வந்தனர்.   இந்தநிலையில் மூளை சாவு அடைந்த ராஜேஸ்வராவ் இதயத்தை சிறுமி லகரிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  அளித்த சிறப்பு உத்தரவின் பேரில் ஸ்ரீகாக்குளத்தில் இருந்து ராஜேஸ்வர்ராவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு   கொண்டு வரப்பட்டது.

இதயம்


 அங்கிருந்து விமானம் மூலம்  ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு,  பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் இதயநல மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.  இதனையடுத்து மருத்துவ நிபுணர்கள் குழு இதயமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web