திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை!

 
திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், இன்று டிசம்பர் 15 சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு முக்கிய விசாரணை நடத்துகிறது. தீபத்தூண் ஆதாரம், மலையடிவாரத்தில் உள்ள தர்காவுக்கு அருகாமை, மற்றும் அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டைப் பின்பற்றுவது ஆகிய விவகாரங்கள் இந்த வழக்கில் விவாதிக்கப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்றத் தனி நீதிபதி சுவாமிநாதன் அளித்த உத்தரவை எதிர்த்து, கோயில் செயல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  இன்று அனைத்துத் தரப்பு வாதங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

திருப்பரங்குன்றம் மலை

மலையில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 1920-ஆம் ஆண்டு நடந்த முதல் வழக்கிலேயே இந்த 'தீபத்தூண்' குறித்து மனுதாரர்கள் எந்தக் குறிப்பையும் வைக்கவில்லை. எனவே, தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறையாக இருந்தது என மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை. கோயில் அருகே தர்கா உள்ளதால், அமைதியும் பாதுகாப்பும் கருத்தில் கொள்ள வேண்டும். மிக முக்கியமான விவகாரத்தில் 3 நாட்களில் எப்படி முடிவு எடுக்க முடியும்?

1947 ஆகஸ்டுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைதான் தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி அந்த நிலைப்பாட்டைப் பின்பற்றவில்லை.

திருப்பரங்குன்றம்

இந்த விவாதம் தொடர்பாக நீதிபதிகள், "1920ம் ஆண்டு முதல் இது போன்றப் பிரச்சினைகள் தொடர்கின்றன; இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். தீபம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டால் அதை ஏன் செய்யக் கூடாது?" என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு பதிலளிக்கையில், ராமஜென்ம பூமி வழக்கின் நிலைப்பாட்டைப் பின்பற்றினால், மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தான் தீபம் ஏற்றுவது குறித்து உத்தரவு பெற முடியும் என்று வாதிட்டது.

அரசுக்கு ஆதரவாக வாதம் வைத்த கோயில் நிர்வாகம், "மலையில் தீபம் ஏற்றத் தனி நபர்களுக்கு உரிமையே இல்லை; இது கோயில் நிர்வாகத்தின் உரிமைக்கு உட்பட்டது. நீதிமன்றம் தனி நபர்களுக்கு உரிமையை வழங்கும் போது, அது ஏகப்பட்டப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்; நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கடினமாக்கும்" என்று வாதிட்டுள்ளது. இன்று அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு இந்த வழக்கில் முக்கியத் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!