போக்குவரத்து தகராறு கொலையாய் மாறிய கொடூரம் … கட்டிட மேஸ்திரி படுகொலை!

 
வேலூர்
 

வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார் (34) நேற்று பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்டார். கஸ்பா, ஆர்.என். பாளையம் பஜாரில் தக்காளி வாங்க பைக்கை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதாக ஏற்பட்ட தகராறே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி அலுவலக உதவியாளரான கோடீஸ்வரன் (54) மற்றும் அவரது மகன் சக்தி (24) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, நேற்று கைகலப்பாக மாறியது.

வேலூர்

இந்நிலையில், இன்று காலை சதுப்பேரியில் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பிரேம்குமாரை பார்த்த கோடீஸ்வரன், மகன் சக்தியை வரவழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் பிரேம்குமாரை கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் சுமார் இரண்டு கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்றனர். ஆர்.என். பாளையம் பஜார் பகுதியில் பிரேம்குமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தி தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!