லாரி மோதி 500 மீட்டர் இழுத்துச் சென்ற கொடூரம்.. 3 பேரும் உயிரிழந்த சோகம்!

 
மேம்பாலம்

லாரியில் சிக்கி அரை கிலோ தூரம் இழுத்துச் சென்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.  

உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள கத்ரா மேம்பாலம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்துசெல்லும். இந்த நிலையில் பரபரப்பான அந்த மேம்பாலத்தின் அருகே நடந்த விபத்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பாலம்

லால்பூர் கிராமத்தில் ராம்தீன், அவரது அண்ணனின் மனைவி மற்றும் அவரது மூன்று வயது மருமகன் ஆகியோர் பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பைக் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் பைக் லாரியின் முன்பக்கத்தில் சிக்கியதால் சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அதன்பிறகே தெரிந்து லாரியை நிறுத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய மூவரையும் பரேலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேம்பாலம்

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், லாரி ஓட்டுநர் தனது வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 
 

From around the web