வறுமையின் கொடூரம்... ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை விற்ற தந்தை!

 
குழந்தை பிரசவம்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பரிசாஹி கிராமத்தில் வறுமையின் காரணமாக தனது 2 வயதுக் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு தந்தையே விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராகேஷ் குமார் பெஹரா என்ற கொத்தனார், தனது இரண்டரை வயது ஆண் குழந்தையை விற்பதற்காக ஒரு நபருடன் பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

குழந்தை

மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார் மல்லிக் தலைமையிலான குழுவினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிமினிபதி பகுதியில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை தற்போது அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விலை பேசி, முன்பணமாக ரூ.50,000 பெற்றுக் கொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ராகேஷ் குமார் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக அவர்களை வளர்க்க மிகவும் சிரமப்பட்டேன். சாப்பாட்டிற்கே வழியில்லாத சூழலில்தான் இந்த விபரீத முடிவை எடுத்தேன்" என்று கூறியுள்ளார்.

குழந்தை தங்கம்

காவல்துறையினரின் விசாரணையில் ராகேஷ் குமார் இரண்டு திருமணங்கள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது விற்கப்பட்ட குழந்தை அவரது இரண்டாவது மனைவிக்குப் பிறந்தது. கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தையின் தாய் ராகேஷைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். தாயின் அரவணைப்பு இல்லாத சூழலைப் பயன்படுத்தி ராகேஷ் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!