இரவில் நடந்த பயங்கரம்.. தந்தை, மகள் கழுத்தை அறுத்து கொடூர கொலை!

 
சாந்தி

சென்னை அடுத்த மாங்காடு அடுக்குமாடி குடியிருப்பில் செல்வராஜ் (65)- மனைவி சாந்தி (55) தம்பதி வசித்து வந்தனர். செல்வராஜ் இசை பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியின் மகன்கள் ராஜேஷ் பிராங்கோ (40), பிரகாஷ் (32), மகள் பிரியா (38). சாந்தி சினிமாவில் துணை நடிகையாக உள்ளார். 

மகன் ராஜேசுக்கு திருமணமாகி, மனைவியுடன் படப்பையில் வசித்து வருகிறார். பிரியா, தனது கணவருடன் மாங்காடு, பாலாஜி நகரில் வசித்து வந்தார். கடைசி மகன் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர், சினிமா துறையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென பிரியாவின் வீட்டிற்கு சென்ற சகோதரன் பிரகாஷ், அங்கு தனது அக்காவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சாந்தி

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரியாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயம் ஏற்பட்டு பிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே, பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து தாய் சாந்தி மற்றும் அண்ணன் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து கதறி அழுதனர். இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பில் மற்றொரு அறையில் செல்வராஜும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற போலீசார் செல்வராஜ் மற்றும் பிரியா ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான பிரகாஷை தேடி வந்தனர். அப்போது பிரகாஷ் அதே பகுதியில் சுற்றித் திரிவதை கண்டறிந்த போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். 

சாந்தி

அவரிடம் நடத்திய விசாரணையில், குடிப்பழக்கம் காரணமாக சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதற்காக கடந்த ஆண்டு பிரகாஷை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவ செலவு அதிகரித்த காரணத்தால் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு அடிக்கடி தனது பெற்றோரிடமும், அக்காவிடமும் அவர் சண்டை போட்டு வந்துள்ளார்.

பின்னர் இருவரையும் கொலை செய்தார். அப்போது சாந்தி வீட்டில் இல்லாததால் தப்பித்துக்கொண்டார். இந்த கொலைக்கு அவர் மனநிலை பாதிக்கப்பட்டது காரணமா அல்லது சொத்து தகராறு உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web