அதிகாலையில் பயங்கரம்.. பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை.. பகீர் பின்னணி!

 
கொலை

சென்னை புளியந்தோப்பு குருசாமி ராஜாபுரம் 3ஆவது தெருவில் கருப்பா (எ) ரகுபதி (30), தனது மனைவி கீதா, 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரகுபதி மீது காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அண்மையில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் வாடகை வீட்டிற்கு மாறினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ரகுபதி ஆட்டோ ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தார். அப்போது 2 ஆட்டோக்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென கத்தியை எடுத்து ரகுபதியை தாக்கினர். அவர் தப்பியோட முயன்றபோதும் சுற்றிவளைத்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

கொலை

இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து, அதிக ரத்தம் வெளியேறி ரகுபதி சம்பவ இடத்தில் மயங்கினார். இதனால் அவர் இறந்துவிட்டதாக கருதி அந்த கும்பல் தாங்கள் வந்த ஆட்டோவில் தப்பி சென்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரகுபதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரகுபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரகுபதிக்கும், அவரது நண்பரான சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், ஆட்களை அழைத்து வந்து ரகுபதியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுரேஷ் உள்ளிட்ட கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web