தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம்... இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞர் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகம் என்ற இளைஞரை அடித்து கொலை செய்து புதைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், காவல்துறையினர் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்திய பிறகு, புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறார் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பெண் தகராறு தொடர்பாக கொலை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
