பகீர்!! கர்ப்பிணி மனைவியைச் சுத்தியலால் தாக்கி கொலை செய்து கணவர் தானும் தற்கொலை!!

 
ரெஜிதா

கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்கோடு பகுதியில் தங்கப்பன்(55) - ரெஜிதா(47) தம்பதி வசித்து வருகின்றனர். தங்கப்பன் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளியாக இருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரெஜிதா இப்போது கர்ப்பிணியாக உள்ளதால் தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் தங்கப்பன் தனது மனைவியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கணவன், மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரம் அடைந்த தங்கப்பன் அருகில் கிடந்த சுத்தியலால் ரெஜிதாவின் தலையில் ஓங்கி அடித்தார். ரெஜிதா இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

ரெஜிதா

ஆத்திரத்தில் தாக்கிய தங்கப்பன், சிறிதுநேரம் கழித்து நிதானத்திற்கு வந்தார். அப்போது கர்ப்பிணி மனைவியைத் தாக்கிவிட்டோமே என குற்ற உணர்ச்சியால் தங்கப்பன் பதற்றமடைந்தார். இதனால் வீட்டின் இன்னொரு அறைக்குச் சென்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இருவர் குறித்தும் சத்தம் இல்லாததால் பெற்றோர் சென்று பார்த்தபோது ரெஜிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். மேலும் ரெஜினாளை மீட்டு பொதுமக்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரெஜிதா

தங்கப்பனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து அருமனை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியைத் தாக்கிய ஆத்திரத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web