கணவன் மனரீதியாக தொல்லை... புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை!

 
இளம்பெண் தற்கொலை

கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், சிகாரிபுரா வட்டம், திண்டதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த லதா (வயது 23) என்ற இளம்பெண், திருமணமான ஏழே மாதங்களில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் மனரீதியிலான கொடுமையால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லதாவுக்கு, பத்ராவதி வட்டம், ஒலேஒன்னூர் காவல்துறையினர் எல்லைக்கு உட்பட்ட ஹன்சின சித்தாபுராவைச் சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான ஆரம்ப நாட்களில், இந்தத் தம்பதியர் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, குருராஜும் அவரது குடும்பத்தினரும் லதாவைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும், அவருக்குத் தொடர்ச்சியாக மனரீதியிலான தொல்லைகளையும் கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லதாவிடமிருந்து நேற்று முன்தினம் (நவம்பர் 25) செல்போன் அழைப்பு எதுவும் வராததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் குருராஜின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு லதா இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, தங்கள் மகளைக் காணவில்லை என்று லதாவின் பெற்றோர் ஒலேஒன்னூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லதாவைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.

5வது திருமணம்

லதாவின் செல்போன் சிக்னல் எங்கே கடைசியாக இருந்தது என்பதைக் கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, அவரது செல்போன் சிக்னல் பத்ராவதி நீர்ப்பாசனக் கால்வாய் பகுதியில் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக, காவல்துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தபோது, நீர்ப்பாசனக் கால்வாயின் கரையோரம் லதாவின் செல்போன் மற்றும் காலணிகள் கிடந்ததைக் கண்டனர். காவல்துறையினர் செல்போனைப் பரிசோதனை செய்தபோது, அதில் லதா ஒரு பதிவை விட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது. அந்தப் பதிவில், "எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த கொடுமையால் நான் இந்தக் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, ஒலேஒன்னூர் காவல்துறையினர், தீயணைப்புப் படையினரை வரவழைத்து, ரப்பர் படகுகள் மூலம் நீர்ப்பாசனக் கால்வாயில் லதாவின் உடலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலேயே மனரீதியான கொடுமையால் புதுப்பெண் தற்கொலை முடிவை எடுத்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!