பகீர்!! கோழிக்குழம்பு வைக்காததால் மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவன்!!

 
சிக்கன்

தெலுங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்   போஷம். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரம்மா. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இவர் வழக்கம் போல் பணிக்குசென்றுவிட்டு  வந்ததும்  போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.வெளியில் சென்று மது போதையில்  வீட்டிற்கு வந்த போஷம் சாப்பாட்டிற்கு கோழி கறி குழம்பு கேட்டார்.

சிக்கன் கோழி  கறி

ஆனால் சங்கரம்மா கத்திரிக்காய் குழம்பு ஊற்றியதால் ஆத்திரம் அடைந்தார். இதனால்  மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். நள்ளிரவு சங்கரம்மா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து சங்கரம்மா தலையில் பலமாக வெட்டினார். இதில் தலை இரண்டாக பிளந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சங்கரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி வெட்டிக் கொலை செய்த பிறகு  போஷம் அங்கிருந்து தப்பி சென்றார்.

போலீஸ்
 காலை நீண்ட நேரம் ஆகியும் சங்கரம்மா வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சங்கரம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து  காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கரம்மா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர். கறிக்குழம்புக்காக மனைவியை வெட்டி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web