ஆபாச படங்களை வைத்து மனைவியை மிரட்டிய கணவர்.. அதிரடி காட்டிய நீதிமன்றம் !!

 
மனைவி

திருச்சியில் திருமணமான பெண் ஒருவர் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதன்பின்னர் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்துவந்தனர். இந்த நிலையில் கணவர் தன்னை மிரட்டுவதாக கூறி பெண் பரபரப்பு புகார் அளித்தார்.

அதாவது, திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு, அப்பெண் அளித்த புகார் மனுவில், தனது தணவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்துள்ளதாகவும், அந்த படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப் போவதகாவும் கூறி மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

மனைவி

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் துணையினர் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் கரூரைச் சேர்ந்த பெண்ணின் கணவர் தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆபாச படங்களை வைத்து மனைவியை மிரட்டியது அம்பலமானது.

மனைவி

இது தொடர்பான வழக்கு விசாரணை  திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திருச்சி ஜே.எம் 2 நீதிமன்ற நீதிபதி பாலாஜி, தேவ் ஆனந்த்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேவ் ஆனந்த் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!