கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி.. 1 - 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

 
பொதுத்தேர்வு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டு கோடை வெயில் தற்போதே கொளுத்தி வருவதால் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத்தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. 

அதாவது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

பொதுத்தேர்வு

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத்தேர்வுகள் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை முன்கூட்டியே நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த தேர்வு அட்டவணை பொருந்தும். பள்ளிக்கல்வித் துறையை பொறுத்தவரையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றித்தான் இந்த தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும், என்றார்.

பொதுத்தேர்வு

தொடர் பேசிய அமைச்சர், கல்லூரிகளை பொறுத்தவரை நாம் ஆலோசனை செய்யவில்லை. பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம். கல்லூரிகளுக்கு மருத்துவத் துறைகளின் ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும், என தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web