விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்.. மனைவியை சுத்தியால் அடித்து கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை..!!

 
தற்கொலை

குடும்ப தகராறில் கணவன் மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (55), வழக்கறிஞர். இவரது மனைவி காந்திமதி என்கிற கனிமொழி (46). இவர்களது மகன் கார்த்தி (25). தற்போது அசாமில் விமானப்படை பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Bhavani, Erode : பவானி: கவுந்தப்பாடியில் பேக்கரி ஒன்றில் பிளாஸ்டிக் முட்டை  பப்ஸ் விற்பனை செய்யப்படுவதாக புகாரை தொடர்ந்து, உணவு பொருள் ...

கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிகோவில் நசியனூர் பிரிவு ஆகிய இரு இடங்களில் ஈஸ்வரன் கடந்த 10 ஆண்டுகளாக சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மகள், ஒரிசேரி புதூர் பகுதியில் உள்ள கனிமொழி தாயார் கோவில் திருவிழாவுக்காக கடந்த 10 நாட்களாக வீட்டில் தங்கியிருந்தார். சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஈஸ்வரன் தனது மனைவியிடம் பெட்ரோல் பங்கிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஈஸ்வரன் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

கனிமொழியின் தாய் வீட்டில் படுத்திருந்தார். பின்னர் ஈஸ்வரன் வீட்டிற்கு சென்று கதவை சாத்தினார். கார்த்தி ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாய் கனிமொழிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் தந்தைக்கு போன் செய்தும் அவரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கார்த்தி, பக்கத்து வீட்டில் உள்ள தனது சித்தப்பாவை அழைத்து, அவரது வீட்டிற்கு சென்று  விவரங்களை கூறுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது சித்தப்பா வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டின் அறையில் கட்டிலில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கனிமொழி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கட்டிலுக்கு அருகில் ஒரு சுத்தியல் கிடந்தது. பின்னர் வீட்டில் உள்ள சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஈஸ்வரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபி டிஎஸ்பி தங்கவேல், கவுந்தப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கனிமொழி, ஈஸ்வரன் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

Gobichettipalayam, Erode : கோபிசெட்டிபாளையம்: கவுந்தப்பாடி சந்தையில் கோழி  திருட முயன்றவரை, பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் |  Public App

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதிகாலையில் பெட்ரோல் பங்கில் இருந்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி கனிமொழியின் தலையில் அடித்தார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து ஈஸ்வரன் சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web