பாட்டியின் பரந்த மனசு.. அரசுக்கு மகளின் நினைவாக ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் தானம்..!!

 
ஆயி

ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக மூதாட்டி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பெண் ஒருவர் தனது ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

கொடிக்குளம் கிராமம்

மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக, கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உக்ர பாண்டியன் என்பவரது மனைவி ஆயி என்பவர் தனக்கு சொந்தமான சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார்.


முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில், மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராஜ், மாவட்ட கல்வி அலுவலர் எஸ்தர் இந்து ராணி, பூர்ணம் மற்றும் அவர்களது உறவினர்கள் அவரது மகள் "ஜனனி" நினைவாக அரசிடம் நன்கொடையாக பதிவு செய்த பத்திரத்தை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், தலைமையாசிரியர் சம்பூர்ணம் ஆகியோர் உடனிருந்தனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web