பெண் குளிப்பதை வீடியோ எடுத்த விவகாரம்… ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கொலையாக மாறிய மரணம்!
கோவையை அடுத்த கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜீவா (25), கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டின் அருகே இருந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஜீவாவை கடுமையாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்த ஜீவாவை அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, பைக்கில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்பட்டதால், ஆரம்பத்தில் வழக்கு பெரிதாக எடுக்கப்படவில்லை.

ஆனால், ஜூன் 26-ந் தேதி ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் விபத்தென பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜீவாவின் அண்ணன் மேற்கொண்ட விசாரணையில், தாக்குதலே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் தான் ஜீவா உயிரிழந்ததாக குற்றம் சாட்டினார்.

புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவிடப்பட்டது. சரவணம்பட்டி போலீசார் தற்போது வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர். ஒன்றரை ஆண்டுக்கு முன் விபத்தாக முடிக்கப்பட்ட ஒரு மரணம், தற்போது கொலை வழக்காக மாறியிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
