பரபரப்பு... 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்ததும் நீதிமன்றத்தில் தற்கொலை முயற்சித்த குற்றவாளிகள்.....!!

 
 திருப்பதி - பசுபதி

20 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதித்த கேட்ட குற்றவாளிகள்  நீதிமன்ற வளாகத்தில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பசுபதி (27), வரதராஜ் (29), திருப்பதி (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், விசாரணை முடிந்து மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு வழங்கி ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ​​குற்றம்சாட்டப்பட்ட திருப்பதி, பசுபதி ஆகிய இருவரும் நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் இருவரும் காயமடைந்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள்

அதன்பின் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக இருவரையும் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்டனையை கேட்டு அதிர்ச்சி அடைந்த குற்றவாளிகள் இருவரும் தற்கொலைக்கு முயன்றார்களா? அல்லது போலீசில் இருந்து தப்பிக்க குதித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web