நாடு முழுவதும் உலுக்கிய சம்பவம்... 5 வயசு சிறுமி... 67 இடங்களில் காயம்... பலாத்கார கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு!

 
அலெ

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது குறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார்.

பாலியல்

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்த போது, புகார் அளித்த சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவரான தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (26) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அலெக்ஸ் பாண்டியன் மீது கொலை, பாலியல் பலாத்காரம், போக்சோ உள்பட 16 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் 2வது கணவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

எரித்துக் கொலை

மேலும் தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பினை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், அது சட்டத்தின்படி வசூலிக்கப்படும் என்றும் கோர்ட்டு தெரிவித்தது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!