செம க்யூட்... முதல்வர் ஸ்டாலினுடன் கைக்குலுங்கிய அஜித் மகன்...!

 
ஷாலினி

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆனாலும் அப்போட்டி குறித்த பேச்சு மட்டும் இன்னும் குறையவில்லை. அதாவது இந்த போட்டியை தமிழக அரசியல் தலைவர்கள், திரைநட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று பார்த்தனர். அவை தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கினர். 

ஷாலினி

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் அமர்ந்து போட்டியை பார்த்தார். அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் உள்ளிடோரும் போட்டியை மைதானத்தில் அமர்ந்து பார்த்தனர். அதேபோல் நடிகர்கள் தனுஷ், சதீஷ், நடிகை ஷாலினி, கீர்த்தி சுரேஷ் உள்ளிடோரும் போட்டியை பார்த்து உற்சாகமடைந்தனர்.

ஷாலினி

நடிகை ஷாலினி, அவரது மகன் ஆத்விக் மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அருகே அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் அஜித் மகன் ஆத்விக்குடன் கைகுலுக்கி பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆத்விக்கிடம் முதலமைச்சர் நலம் விசாரித்ததாகவும் அதற்கு அவர் க்யூட்டாக பதில் அளித்ததாகவும் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web