"தொடரும் மீனவர்கள் கைது விவகாரம்... முதல்வர் கடிதம் எழுதினால் போதுமா?" - சீறும் சீமான்!

 
சீமான்

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறிய திமுக மற்றும் பாஜக அரசுகளைச் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மீனவர்கள் மீதான தாக்குதலும் கைது நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டிய சீமான், கடந்த ஐந்து ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டுள்ளார். 2021 முதல் 2026 வரை: கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள்

2026-ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். "ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது, திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசிற்குக் கடிதம் மட்டுமே எழுதித் தனது கடமையை முடித்துக்கொள்கிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது" எனச் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக கூட்டணி, மீனவர் நலனுக்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாதது ஏன்? என்றவர், மத்திய பாஜக அரசையும் விமர்சித்து, "குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் காட்டும் அக்கறையைத் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது காட்டாதது ஏன்? அகண்ட பாரதம் பேசும் பாஜக, கச்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்?" என வினவியுள்ளார்.

சீமான்

மீனவர் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணக் கச்சத்தீவை மீட்பது ஒன்றே ஒரே வழி. தொகுதி மறுசீரமைப்புக்காகப் பதறும் திமுக அரசு, மீனவர் நலனுக்காக ஏன் ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை? கடிதம் எழுதுவதைக் கைவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்துச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கச்சத்தீவு தொடர்பான வழக்கை விரைவுபடுத்தி, தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்கச் செய்ய வேண்டும் எனத் தனது அறிக்கையில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!