ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஜனவரி இறுதியில் இந்தியா வருகை!

 
ஜப்பான்
 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் தகைச்சியுடன் அவர் சந்தித்து பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், புதிதாக பதவியேற்ற தகைச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்தார். இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த சந்திப்பின்போது, டெல்லியில் நவம்பர் தொடக்கத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தகைச்சி கேட்டறிந்தார். அந்த சம்பவத்திற்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறினார். இரு நாடுகளின் நட்பை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜப்பான் வெளியுறவு மந்திரி டோஷிமித்சு மோதேகி, ஜனவரி மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். குறைக்கடத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதனால் மோதேகியின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!