கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது" - உச்ச நீதிமன்றம் வேதனை!

 
கரூர் விஜய் கரூர் விஜய்

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நேர்ந்த துயரம் குறித்துத் தற்போது டெல்லியில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

கரூர் விஜய்

கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். தலைவர் விஜய் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததே கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்குக் காரணம் என காவல்துறை தரப்பும், போதுமான பாதுகாப்பு மற்றும் தடுப்பு வசதிகளைச் செய்யவில்லை என தவெக தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் போது, "கரூரில் நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கரூர்

இருப்பினும், இந்த வழக்கு தற்போது சிபிஐ (CBI) விசாரணையில் இருப்பதால், இதன் மெரிட் குறித்துத் தற்போது தலையிட்டு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!