“தீபத்தூண் தர்காவுக்குச் சொந்தமான இடத்தில்தான் உள்ளது!” - திருப்பரங்குன்றம் வழக்கில் வக்பு வாரியம் வாதம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது, அந்தத் தூண் தர்காவுக்குச் சொந்தமான இடத்தில் தான் உள்ளது என்று வக்பு வாரியம் தரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் போது, வக்பு வாரியம் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் பின்வருமாறு: திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவது என்பது தொடர்ச்சியானப் பழக்கவழக்கமாக இருந்தது இல்லை. கோவில் வழக்கத்தை மாற்றி, தீபமேற்றப்படாத இடத்தில் தீபமேற்ற மனுதாரர் கோருகிறார்.

தீபத்தூண் என்று கூறப்படும் அந்தத் தூண், தர்காவுக்குச் சொந்தமான இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் உள்ள தர்கா, அதைச் சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் அனைத்தும் நெல்லித்தோப்பு தர்காவுக்குச் சொந்தமானவை. இந்த முக்கிய அம்சத்தை தனி நீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை. மலை உச்சியில் தர்கா இருப்பதால் தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது.

இந்த விவகாரம் முழுவதையும் உரிமையியல் கோர்ட் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்றும், 1920 ஆம் ஆண்டு உரிமையியல் கோர்ட் வழங்கிய உரிமையை இந்தத் தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும் என்றும் வக்பு வாரியம் வலியுறுத்தியது.
மேலும் மலை உச்சியில் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் உள்ள நிலையில், குதிரைச்சுனை அருகே பாதைகள் பிரிகின்றன என்றும், தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தூண் உள்ளது என்றும் வக்பு வாரியம் தனது வாதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
